search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்னி டெஸ்ட்"

    1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதுபோல் இந்த வெற்றி மிகப்பெரியது என்று ரவி சாஸ்திரி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகவும், 72 வருடத்திற்குப்பிறகும் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.

    தொடரை கைப்பற்றிய பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘1983 உலகக்கோப்பை மற்றும் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியதை போல் இந்த தொடரை கைப்பற்றியது பெரிய சாதனை அல்லது அதைவிட மிகப்பெரிய சாதனை’’ என்றார்.

    பாகிஸ்தானை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும்போது இந்திய அணியில் ரவி சாஸ்திரி இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முதலில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிட்னியில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாகவும், 72 வருடத்திற்குப்பிறகும் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.

    மேலும் இதுவரை ஆசிய அணிகள் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம்) 29 கேப்டன் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று விளையாடியுள்ளது. இதில் விராட் கோலி மட்டுமே தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்மித் மற்றும் வார்னர் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல என்று கவாஸ்கர் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சிட்னி டெஸ்டில் இரண்டு நாட்கள் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

    இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிலர் இந்திய அணியை பாராட்டுவதைவிட, ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல’’ என்று கவாஸ்கார் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் விளையாடியது இந்தியாவின் தவறல்ல. இருவரின் தடையை அவர்களால் குறைத்திருக்க முடியும். ஆனால் ஒரு வருடத்தடை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு நல்லது என்று நினைத்துள்ளனர். கிரிக்கெட் போட்டியை தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் வீரர்களுக்கு இது உதாரணமாக இருக்கும் என்பதால் இதை எடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனையைப் படைத்துள்ளது.’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AUSvIND #RamnathKovind
    புதுடெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

    72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள். பேட்டிங், பந்துவீச்சு என இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பான பங்களிப்பை கண்டு பெருமை கொள்கிறோம் என தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். #AUSvIND #RamnathKovind
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். #AUSvIND

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உணவு இடைவேளை முடிந்து போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில் போட்டி  டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. #AUSvIND

    சிட்னி டெஸ்டில் கடைசி நாள் முழுவதும் பேட்டிங் செய்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால் நெருக்கடியில் உள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முதல் செசன் மழையால் முழுவதும் தடைபட்டது. உணவு இடைவேளைக்குப்பிறகு 2-வது செசனில் இந்தியா சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்தது. தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

    தற்போது வரை ஆஸ்திரேலியா 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை ஒருநாள் முழுவதும் உள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் ஆஸ்திரேலியா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டும். அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும்.

    இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைவதற்கான சாத்தியமே இல்லை. ஏற்கனவே 2-1 என முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது.
    சிட்னியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்னில் ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்னுடனும், கம்மின்ஸ் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மழையால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. அதன்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 25 ரன்னிலேயே ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். ஹேண்ட்ஸ்காம்ப் 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த நாதன் லயன் ரன்ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். நாதன் லயன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.



    கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 300 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவிற்கு வந்தது. ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. .இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    இந்தியாவை விட ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்ததால், சதத்தை நெருங்கும்போது சற்று பதற்றமாக இருந்தது என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

    விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதனால் இன்று சதத்தை நெருங்கும்போது சற்று பற்றமாக இருந்தது என்று ரிஷப் பந்த் தெரிவித்தார்.

    இதுகுறித்து ரிஷப் பந்து கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவில் விளையாடும்போது இரண்டுமுறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டேன்.

    இதனால் இன்றைய போட்டியில் 90-ஐ தாண்டும்போது சற்று பதற்றமாக இருந்தது. இதனால் சற்று பயமாகவும் இருந்தது. இருந்தாலும் வெற்றிகரமாக சதம் அடித்தேன். சதம் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திய என்னுடைய ஸ்டைலை நான் விரும்புகிறேன்.

    நான் அதேபோல் செய்வேன் என்று நினைத்தது கிடையாது. ஆனால் சந்தோசத்தை வெளிப்படுத்தும்போது தானாக வெளியாகிறது’’ என்றார்.
    சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 193 ரன்கள் குவித்த புஜாரா, 7 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். #CheteshwarPujara #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வரும் புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த புஜாரா இன்று சிட்னி டெஸ்டிலும் சதம் விளாசி அசத்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 250 பந்தில் 130 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    இன்று தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 181 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.



    உணவு இடைவேளைக்குப்பிறகு அணியின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டியது. உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா இன்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 193 ரன்களில் ஆட்டமிழந்தார். 373 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் அவர் இந்த இலக்கை எட்டினார்.  அவரது விக்கெட்டை லயன் கைப்பற்றினார். 7 ரன்களில் புஜாரா தனது இரட்டை சதத்தை தவறவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இரட்டை சதத்தை தவறவிட்டபோதிலும், இந்த போட்டியின்போது பல்வேறு சாதனைகளை எட்டியுள்ளார் புஜாரா. #CheteshwarPujara #AUSvIND

    சிட்னி டெஸ்டில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த மயாங்க் அகர்வால், சதத்தை தவறவிட்ட தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க வீரரான மயாங்க் அகர்வால் மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இன்று நடைபெற்ற சிட்னி டெஸ்டிலும் 77 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர், நாதன் லயன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இரண்டு போட்டியிலும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டார். இந்நிலையில் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என்ற மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு மயாங்க் அகர்வால் இதுகுறித்து கூறுகையில் ‘‘மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனதால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருந்தால், அது சிறந்த பாடமாக இருக்கும். நாதன் லயன் பந்தை அதிரடியாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. என்னுடைய விக்கெட்டை இழந்ததற்காக மிகவும் ஏமாற்றமடைந்தேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா தொடரில் மூன்று சதங்கள் விளாசியுள்ள புஜாரா 1135 பந்துகளை சந்தித்து ராகுல் டிராவிட்டின் சாதனையை நெருங்கி வருகிறார். #Pujara
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வரும் புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த புஜாரா இன்று சிட்னி டெஸ்டிலும் சதம் விளாசி அசத்தினார். இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 250 பந்தில் 130 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.

    நிதானமாக விளையாடும் புஜாரா இதுவரை இந்தத் தொடரில் 1135 பந்துகள் சந்தித்துள்ளார். இதன்மூலம் 2014-15 தொடரில் விராட் கோலி (1093 பந்துகள்) படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் 1977-78-ல் கவாஸ்கர் (1032) படைத்திருந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.



    விஜய் ஹசாரே (1192 பந்துகள்) 1947-48-ல் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரே தொடரில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையில் 2-வது இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 2003-04 தொடரில் 1203 பந்துகள் சந்தித்து முதல் இடத்தில் உள்ளார்.

    புஜாரா முதல் இன்னிங்ஸ் மற்றும் 2-வது இன்னிங்சில் இன்னும் 69 பந்துகள் சந்தித்தால் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிப்பார்.
    ×